News March 31, 2025
சமாதான முயற்சியா? பாஜகவில் சேர்க்க முயற்சியா?

இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தபிறகு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும் டெல்லி சென்று வந்தார். இதையடுத்து அதிமுகவில் இபிஎஸ்க்கும், அவருக்கும் நிலவும் கருத்து வேறுபாட்டை களைந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜகவில் செங்கோட்டையனை சேர்க்க முயற்சி நடப்பதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இதில் எது உண்மை?
Similar News
News January 17, 2026
‘அதிமுக கூட்டணியில் புதிதாக 4 கட்சிகள்’

PM மோடி தலைமையில் வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தில், NDA-ல் இடம்பெறும் கட்சிகள் பற்றி அறிவிக்கப்படும் என பாமக Ex MLA மு.கார்த்தி கூறியிருக்கிறார். தங்களது கூட்டணியில் மேலும் 4 கட்சிகள் வர உள்ளதாக கூறிய அவர், அவை எந்த கட்சிகள் என்று இப்போது சொல்ல முடியாது என்றார். மேலும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தங்கள் கூட்டணியின் பொதுவான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
மீண்டும் இணையும் ‘சூதுகவ்வும்’ காம்போ!

‘சூதுகவ்வும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், ‘கை நீளம்’ என்ற புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளதாக நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். ‘சூதுகவ்வும் 2-ம் பாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த கதையில், சரியான கிளைமாக்ஸ் அமையாததால் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 17, 2026
வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.


