News March 31, 2025
திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து மாட்டிக்கொண்ட திருடன்

காட்பாடி வெங்கடேசபுரம் பகுதியில் காட்பாடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலத்தை ராஜேஷ்(23) என்பதும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சத்யா என்பவரது வீட்டில் ஆறு சவரன் தங்க நகைகள் திருடிய அவர், மீண்டும் அதே வீட்டில் கைவரிசை காட்ட வந்து போலீசிடம் சிக்கிக் கொண்டார்.
Similar News
News February 7, 2026
வேலூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 7, 2026
வேலூர்: லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் சுரேஷ் ( 57), தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று அதிகாலை சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கன்டெய்னர் லாரி அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 7, 2026
வேலூர் அருகே பெண் பரிதாப பலி…

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுரி ( 48), கடந்த 5 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அதிகாலை, கழிவறை சுத்தம் செய்யும் திராவகத்தை கவுரி குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவுரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


