News March 31, 2025
தூத்துக்குடியில் ஆயிரம் கால் பள்ளிவாசல்; தெரியுமா?

காயல்பட்டினத்தில் ஆயிரம் கால் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பெரிய குத்பா பள்ளிவாசல் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் கி.பி. 842 இல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆயிரம் தூண்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு முறை இந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை சிறப்பு வாய்ந்தது. *புது தகவல்னா ஷேர் பன்னவும்
Similar News
News April 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
News April 6, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுரை

இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. “ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டுவீர், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வீர்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2025
தூத்துக்குடியில் ‘புத்தொழில் களம்’ சிறப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தின் கட்டமைப்பை முன்னேற்றும் விதமாகவும், மேம்படுத்துவதன் வழியாகவும், இந்தியாவின் முதல் மாவட்டமாக மாற்றும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் ‘புத்தொழில் களம்’ என்ற நிகழ்ச்சி (ஏப் 6) இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.