News March 31, 2025
செங்கல்பட்டு தவெக மாவட்ட தலைவர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
Similar News
News February 17, 2026
செங்கை: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, ஓட்டுநர் மட்டுமின்றி உடன் வரும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளில் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News February 17, 2026
செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 17, 2026
செங்கை: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

செங்கை மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <


