News March 31, 2025

4.8 காேடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி.

image

நாடு முழுவதும் இதுவரை 4.8 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி. வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுடன் சேர்ந்து டிஜிட்டல் ஐ.டி. வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த ஐ.டி.யில் விவசாயிகளிடம் இருக்கும் நிலம், பயிரிடப்பட்ட பயிர் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். உ.பி.யில் அதிகபட்சமாக 1.2 கோடி விவசாயிகளுக்கு ஐ.டி. வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 31, 2026

திமுக ஆட்சிக்கு இன்னும் 2 அமாவாசைதான்: EPS

image

புதிய புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதில் நம்பர் 1 CM, ஸ்டாலின்தான் என EPS விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் பல திட்டங்களை திமுக அறிவிப்பதாகவும், திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் நோபல் பரிசு கொடுத்தால் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும் எனவும் சாடியுள்ளார். விரைவில் தேர்தல் வருவதால், திமுக ஆட்சியின் ஆயுள் காலம் இன்னும் 2 அமாவாசைதான் எனவும் கூறியுள்ளார்.

News January 31, 2026

சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 31, 2026

ஓபிஎஸ் தனித்து போட்டியிட விரும்பும் திமுக

image

முன்னாள் CM OPS, தனித்து நிற்பதே தங்களுக்கு சாதகம் என ரகசிய ஆய்வுக்கு பின் திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், திமுகவுடன் கூட்டணி வைத்து களமிறங்கினால், அவரது ஆதரவு ஓட்டுகள் திமுகவிற்கு கிடைக்காது என்றும், அதே நேரத்தில் OPS தனித்து நின்றால் அதிமுக ஓட்டுகள் பிரிவதுடன் திமுகவின் வெற்றிக்கும் வழிவகுக்கும் எனவும் பேசப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!