News March 31, 2025
திருச்சி மத்திய மண்டலத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு

திருச்சி மத்திய மண்டலத்தில் 2023-ஆம் ஆண்டை விட கடந்தாண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் 2023-இல் 1,806 விபத்து வழக்குகள் பதியப்பட்டு 555 இறப்புகள் ஏற்பட்டு 1,278 போ் காயமடைந்தனா். 2024-இல் 1,922 வழக்குகள் பதியப்பட்டு 634 இறப்புகள் ஏற்பட்டு 1,317 போ் காயமடைந்துள்ளனா். வழக்குகள் 116-ம், இறப்புகள் 79-ம், காயங்கள் 39-ம் அதிகரித்துள்ளன.
Similar News
News January 31, 2026
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெல்ட் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.2600 எனவும், டயர் டைப் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்துக்கு ரூ.1800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டால், வட்டாட்சியர்கள், வேளாண் அலுவலர்களிடம் புகாரளிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: அன்பு சோலை மையம் குறித்த அறிவிப்பு

சமூக நலன் & மகளிர் உரிமை துறை சார்பில், திருச்சி பெட்டவாய்த்தலை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் மூத்த குடிமக்களுக்கான அன்பு சோலை மையம் செயல்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் உணவு, இயன்முறை மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு 0431-2413796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.