News March 31, 2025
சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி… எதில் தெரியுமா?

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. 17.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சிஎஸ்கே இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனா, இதுக்கெல்லாம் கப்பு தரமாட்டாங்க என சிஎஸ்கே ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
NDA கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்: செல்வப்பெருந்தகை

NDA கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றும், அதில் யார் சேர்ந்தாலும் மூழ்கடிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தனை நாள்களாக EPS-ஐ துரோகி எனக் கூறிவந்த TTV தினகரன் NDA-வில் இணைந்துள்ளார்; அக்கூட்டணி ஒரு இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி என்று அவர் சாடியுள்ளார்.
News January 21, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

டாஸ்மாக் கடைகள் ஆண்டுக்கு 8 நாள்கள் மட்டுமே இயங்காது. ஆனால், அடுத்த 10 நாள்களில் மட்டும் 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது, ஜன.26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாள்களில் தமிழகத்தில் மது விற்பனை கிடையாது. இவ்விரு நாள்களிலும் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News January 21, 2026
உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னை இருக்கா?

தற்போது பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதால் அவர்களுக்கு PCOS போன்ற பிரச்னைகள் வருமோ என பெற்றோர் வருந்துகின்றனர். ஆனால் பூப்படைந்த முதல் 2 வருடங்களில் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் சொல்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகும்/, சீரற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு, முகத்தில் அதீத முடி வளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு டாக்டரை அணுகுங்கள். விழிப்புணர்வுக்காக, SHARE.


