News March 31, 2025
103 மருந்துகள் தரமற்றவை

நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என்று மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவை தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 24, 2026
சென்னை: கோயிலில் ரூ.41,800 சம்பளத்தில் வேலை!

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சரக்கறை காப்பாளர், அலுவலகம் உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, ஸ்ரீபாதம் தாங்கி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு முதல் பணிக்கு ஏற்றாற்போல படித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.41,800 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.27-க்குள் <
News January 24, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
News January 24, 2026
விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.


