News March 31, 2025
இதுக்கு காரணமும் 90s கிட்ஸ் தான்!

ஜப்பான் கார்ட்டூன் வடிவமான Ghibli ட்ரெண்டால் உலகமே திக்குமுக்காடி வருகிறது. 1985ல் தொடங்கப்பட்ட Studio Ghibliயின் கார்ட்டூன்கள் இன்று ட்ரெண்டடிக்க, 90ஸ் கிட்ஸும் ஒரு காரணமே. ஆம், இந்த கார்ட்டூன்களுக்கு 90களிலும், 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும், 90ஸ் கிட்ஸ் ஏகோபித்த வரவேற்பை அளித்தனர். அதன் காரணமாக, புதுசா Gen Zக்கு ஏதாவது ட்ரெண்டு கொடுக்க நினைத்த AIயும், Ghibliயை கையில் எடுக்க வைத்துள்ளது.
Similar News
News April 3, 2025
இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். பின், அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செல்கிறார்.
News April 3, 2025
மகளுடன் ரெடின் கிங்ஸ்லி

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கிங்ஸ்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2023 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றது.
News April 3, 2025
எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ

முல்லைப் பெரியார் அணை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார். அணை அருகில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து கேரளா நீரில் மூழ்கலாம் என கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தவாக தலைவர் வேல்முருகனும் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.