News March 31, 2025

கோவையில் 7 பேருக்கு தொழுநோய் சிகிச்சை துவக்கம்

image

கோவையில் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சூலூர் மற்றும் ஆனைமலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 7 பேருக்கு தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 223 குழுக்கள் மூலம் 4.95 லட்சம் பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. இதுவரை 100 நாட்களாக ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளன.

Similar News

News February 9, 2026

கோவை: ரயில்வேயில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195
2) வயது வரம்பு: 18 – 33
3) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
4) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.
5) விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026
மேலும், விவரங்களுக்கு <>click here<<>>

News February 9, 2026

கோயம்புத்தூரில் மர்ம மரணம்! பரபரப்பு

image

சத்தியைச் சேர்ந்தவர் எபினேசர். இவர் கோவையில் சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மேம்பாலத்தின் அடியில் எபினேசர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். இது கொலையா? பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 9, 2026

கோவையில் சோகம்: ஓராண்டில் 72 உயிர்கள் பலி

image

தமிழகத்தின் 2-வது பெரிய ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் இருந்து வருகிறது. கோவையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் அஜாக்ரதையாக தண்டவாளத்தை கடத்தல், செல்போன் பேசிக்கொண்டு கடந்து செல்வது உள்ளிட்ட காரணங்களால் 72 பேர் பலியாகி உள்ளனர்.

error: Content is protected !!