News March 31, 2025

2029 வரை மோடியே பிரதமர்: பட்னாவிஸ்

image

2029 வரை நரேந்திர மோடியே பிரதமர் பதவியில் நீடிப்பார் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் விளக்கமளித்துள்ளார். PM மோடி தனது ராஜினாமா குறித்து அறிவிக்கவே நேற்று நாக்பூரில் உள்ள RSS தலைமை அலுவலகத்திற்குச் சென்றதாக <<15947592>>சஞ்சய் ராவத் <<>>பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்னாவிஸ் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Similar News

News April 3, 2025

இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

image

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். பின், அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செல்கிறார்.

News April 3, 2025

மகளுடன் ரெடின் கிங்ஸ்லி

image

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. மகளுடன் இருக்கும் புகைப்படத்தை கிங்ஸ்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 2023 டிசம்பரில் திருமணம் நடந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடைபெற்றது.

News April 3, 2025

எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ

image

முல்லைப் பெரியார் அணை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார். அணை அருகில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து கேரளா நீரில் மூழ்கலாம் என கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தவாக தலைவர் வேல்முருகனும் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.

error: Content is protected !!