News March 31, 2025

ATMல் அடிக்கடி பணம் எடுப்பவரா? இத கவனியுங்க

image

வரும் மே 1 ஆம் தேதி முதல், ATMல் இருந்து பணம் எடுப்பதில் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி ATM இல்லாமல், வேறு வங்கியின் ATMல் பணம் எடுத்தால், மாதத்தின் முதல் 3 முறை மட்டும் இலவசம். 4வது முறையில் இருந்து பணம் எடுப்பதற்கு ₹19 பிடித்தம் செய்யப்படும். அதேபோல, வங்கி கணக்கு வைத்திருக்கும் ATMலேயே 5 முறை மட்டுமே இலவசம். 6வது முறையில் இருந்து ₹23 பிடிக்கப்படும்.

Similar News

News January 18, 2026

தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

image

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 18, 2026

விவசாயிகளுக்கான மதிப்பு குறைந்து வருகிறது: கார்த்தி

image

விவசாயிகளை இச்சமூகம் பெரிதாக அங்கீகரிப்பதில்லை என கார்த்தி கவலை தெரிவித்துள்ளார். உழவன் விருதுகள் விழாவில் பேசிய அவர், விவசாயிகளுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு ஒருபோதும் நின்றுவிடவில்லை என கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோரை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News January 18, 2026

திமுக கூட்டணியில் விசிகவால் ஏற்பட்ட திருப்பம்

image

அன்புமணி அதிமுக பக்கம் சென்றுவிட்டதால், ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைவார் எனப் பேசப்படுகிறது. இதனால் விசிகவை சமரசம் செய்யும் வேலையில் திமுகவினர் இறங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சாதிய பாமக கட்சியுடன் எப்போதும் உறவு கிடையாது என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். இது, ராமதாஸ் மூலம் வடமாவட்டங்களில் பலம்பெற நினைத்த திமுகவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!