News March 31, 2025
எந்நேரமும் 3ம் உலகப் போர்.. பிரபலம் கணிப்பு

கொரோனா, 2ம் எலிசபெத் ராணி மறைவு, உக்ரைன் மீதான ரஷ்ய போர் உள்ளிட்டவற்றை கணித்ததாக கூறப்படுபவர் பிரேசிலின் அதோஸ் சலோமே. இதனால் அவர், வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படுகிறார். தற்போது அவர், நாசவேலை, கடலுக்கு அடியே கேபிள் துண்டிப்பு போன்ற ஹைபிரிட் சம்பவங்களால் 3ஆம் உலகப் போர் எந்நேரமும் வெடிக்கலாம், இதை எதிர்கொள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News April 3, 2025
ALERT: பாதங்களில் இந்த அறிகுறிகள் தெரிகிறதா?

கால்களை இழுத்து (அ) அகலமான அடிகளை எடுத்து வைத்து நடந்தால், அது நரம்பு சேதத்தை குறிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், இது மூளை, முதுகுத் தண்டு, தசை பிரச்னைகளுடன் தொடர்பிருக்கலாம். தொடர்ந்து பாதங்கள் வீங்கினால் அது ரத்து ஓட்ட, இதய, சிறுநீரக பிரச்னைகளை குறிக்கும். பாதங்களில் எரியும் உணர்வு ஏற்பட்டால் அது நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறியாகும். ஆறாத புண்கள் நீரிழிவு நோயின் எச்சரிக்கையாகும்.
News April 3, 2025
மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வரும் 5ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம், அல்லது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.
News April 3, 2025
மே மாதம் வரலாறு படைக்க போகும் இந்தியர்

இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, வரும் மே மாதம் நாசா உதவியின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ISS) பயணிக்க உள்ளார். தனியாரின் Axiom Mission 4 திட்டத்தின் ஒரு பகுதியாக, 4 வீரர்களுடன் அவர் பயணிக்க உள்ளார். இதன்மூலம், ISS செல்லும் முதல் இந்தியர் என்ற பெயரை அவர் பெற உள்ளார். அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திலும் சுக்லா இடம்பெற்றுள்ளார்.