News April 2, 2024
அமைச்சர் ராஜகண்ணப்பன் தீவிர பிரசாரம்

முதுகுளத்தூர் தொகுதி தேரிருவேலி, கடம்போடை உள்ளிட்ட கிராமங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்து இன்று பிரசாரம் செய்தார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் கல்வி உதவித்திட்டம், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி மகளிர் பயணம் உள்ளிட்ட திட்ட பயன்கள் குறித்து அமைச்சர் பேசினார். காதர்பாட்ஷா பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல்ஏ உள்பட பலர் உடன் சென்றனர்
Similar News
News February 20, 2026
ராமநாதபுரத்தில் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறையினர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 1/2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மீண்டும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
News February 20, 2026
12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.