News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் பண்ணுங்க<<>>

Similar News

News February 6, 2026

கள்ளக்குறிச்சியில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

image

கள்ளக்குறிச்சி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE!

News February 6, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகரத் திருட்டு!

image

ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(28). சம்பவத்தன்று தனது பைக்கை சேலம் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 6, 2026

உளுந்தூர்பேட்டை: கேஸ் சிலிண்டர் அடியில் இருந்த பாம்பு!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). கூலித் தொழிலாளியான இவரது வீட்டு சமையல் அறை, கேஸ் சிலிண்டர் அடியே 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

error: Content is protected !!