News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஷேர் <
Similar News
News February 2, 2026
தருமபுரி: மதுபோதையில் அட்டூழியம்; போலீசார் அதிரடி!

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் மதுபோதையில் அந்த பகுதியில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இதேபோல எலங்காலப்பட்டியை சேர்ந்த ராமர் (60) என்பவரும் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை தொந்தரவு செய்த 2 பேரையும் கைது செய்தனர்.
News February 2, 2026
தருமபுரி: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தருமபுரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
தருமரியில் வசமாக சிக்கிய வாலிபர்!

ஒட்டப்பட்டி ஏரிக்கரை பகுதியில் போலீசார் நேற்று (பிப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓடிய வாலிபரை துரத்தி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எட்டிமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20) தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


