News April 2, 2024
மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமின்

மதுபான கொள்கை வழக்கில் ED கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மதுபான வழக்கில் இதுவரை கெஜ்ரிவால் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் ஆளாக இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங் 6 மாதமாக சிறையில் இருந்து வந்தார். இதே வழக்கில் கைதாகி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சிறையில் உள்ளனர்.
Similar News
News January 5, 2026
பிரபல நடிகர் அப்பச்சன் காலமானார்

பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன்(77), ஆலப்புழாவில் இன்று காலமானார். 70-களில் மலையாள சினிமாவிற்கு அடியெடுத்து வைத்த அவர், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘சுறா’ படத்தில் அவர் நடித்திருந்தார். அப்பச்சன் மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News January 5, 2026
முகமது ஷமிக்கு ECI சம்மன்

மேற்கு வங்கத்தில் SIR நடைமுறையின் ஒரு பகுதியாக, முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களது கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக, வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உதவி தேர்தல் பதிவு அதிகாரி முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் பிறந்த ஷமி, பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் நிரந்தரமாக வசித்து வருவதுடன், அங்கு வாக்காளராகவும் உள்ளார்.
News January 5, 2026
கரும்பு கொள்முதல்.. அரசை விளாசிய அன்புமணி

பொங்கல் தொகுப்புக்கான கரும்பை, உழவர்களிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்யுமாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கரும்பு கொள்முதல் பற்றி இதுவரை அரசு அறிவிக்காததால், அதை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு கரும்புக்கு ₹35 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் உழவர்களுக்கு ₹15 மட்டுமே கிடைக்கும் என அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.


