News March 31, 2025
காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News April 3, 2025
எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும்: வைகோ

முல்லைப் பெரியார் அணை குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் ‘எம்புரான்’ படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தியுள்ளார். அணை அருகில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடித்து கேரளா நீரில் மூழ்கலாம் என கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை அமைத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தவாக தலைவர் வேல்முருகனும் இப்படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.
News April 3, 2025
ALERT: பாதங்களில் இந்த அறிகுறிகள் தெரிகிறதா?

கால்களை இழுத்து (அ) அகலமான அடிகளை எடுத்து வைத்து நடந்தால், அது நரம்பு சேதத்தை குறிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், இது மூளை, முதுகுத் தண்டு, தசை பிரச்னைகளுடன் தொடர்பிருக்கலாம். தொடர்ந்து பாதங்கள் வீங்கினால் அது ரத்து ஓட்ட, இதய, சிறுநீரக பிரச்னைகளை குறிக்கும். பாதங்களில் எரியும் உணர்வு ஏற்பட்டால் அது நீரிழிவு நரம்பியல் நோயின் அறிகுறியாகும். ஆறாத புண்கள் நீரிழிவு நோயின் எச்சரிக்கையாகும்.
News April 3, 2025
மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வரும் 5ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம், அல்லது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.