News March 31, 2025

கோயிலுக்குச் சென்ற பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

image

தெலங்கானா மாநிலம் ஓர்கொண்டா அருகே கோயிலுக்கு சென்ற திருமணமான பெண்ணை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உறவினர்களுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுவிட்டு குட்டா பகுதிக்கு திரும்பியபோது வழிமறித்த கும்பல், உறவினர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு பெண்ணின் கைகளைக் கட்டி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. 6 பேர் சிக்கிய நிலையில், இருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

பாஜகவின் தேசிய தலைவராகும் நிதின் நபின்

image

நிதின் நபின் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய தலைவர் பதவிக்கு அவர் மட்டுமே இதுவரை மனுதாக்கல் செய்துள்ளதால், ஒருமனதாக நபின் தேர்தெடுக்கப்பட உள்ளார். PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் நபின் தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்.

News January 19, 2026

10th பாஸ் போதும்… ₹20,000 சம்பளம்

image

ஆதார் மைய அலுவலகங்களில் 282 சூப்பர்வைசர், ஆபரேட்டர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *18 வயது நிரம்பி இருக்க வேண்டும் *கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ஐடிஐ *தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் *சம்பளம்: ₹20,000 *வரும் 31-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் *விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் * வேலை தேடும் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

News January 19, 2026

விஜய்யை மிரட்டும் பாஜக: TKS இளங்கோவன்

image

‘ஜன நாயகன்’ படத்திற்கு திட்டமிட்டு பாஜக இடையூறு செய்வதாக டிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக விரும்புவதால் இவ்வாறு மிரட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக ஒரு வாஷிங்மெஷின் போன்றது என்ற அவர், தங்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டால் ஒருவரின் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் அவர்கள் நீக்கிவிடுவார்கள் எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!