News March 31, 2025

புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகம் விற்பனை

image

ராமநாதபுரம் மாவட்ட நிருவாகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா மார்ச் 21 அன்று தொடங்கியது. 10 நாள் நடைபெற்ற திருவிழா நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த 10 நாள் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. ரூ.1 லட்சத்திற்கு மேல் புத்தகம் வாங்கிய வாசகர்களுக்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பரிசுகளை வழங்கினார்.

Similar News

News February 11, 2026

ரூ.1853 கோடியில் பரமக்குடி – இராமநாதபுரம் 4 வழிச்சாலை

image

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலை கடந்த 2015ல் ரூ.934 கோடியில் துவங்கி 2018 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பரமக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரை 46.7 கீ.மீ தூரம் நான்கு வழிச்சாலை யாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து, ரூ.1853 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது அரியனேந்தல் பகுதியில் பணிகள் துவங்கியதுள்ளன.

News February 11, 2026

பரமக்குடியில் விபத்து; சம்பவ இடத்திலேயே பலி!

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, முத்துசெல்லாபுரம், நான்கு வழிச்சாலை அருகே கார் – பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்த ஆதார் கார்டின் அடிப்படையில் இறந்தவர் ஆறுமுகம் கந்தன், எனவும் ஊர் உறையூர் என தெரியவந்துள்ளது.

News February 11, 2026

இராம்நாடு: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04567230630) அணுகலாம். *நண்பர்களுக்கும் பகிரவும்*

error: Content is protected !!