News March 31, 2025

LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

image

4 நாள்களாக நீடித்து வந்த LPG டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் சுமார் 4,000 லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கட்டுப்பாடுகளைத் தளர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Similar News

News April 7, 2025

துபாயில் மே 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா

image

துபாயில் வரும் மே மாதம் 4ஆம் தேதி பிரமாண்ட திருக்குறள் விழா நடைபெறவுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி CM ரெங்கசாமி தலைமை வகிக்க, மலேசிய எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன், நடிகர் விவேக் ஓபராய், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், ஞான சம்பந்தன், சுமதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதில் பங்கேற்க முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

News April 7, 2025

BIG BREAKING: பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு?

image

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ₹2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நுகர்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும், பொதுமக்களுக்கு விலையை உயர்த்தக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 7, 2025

இந்தியாவுக்கு விசா வழங்க சவுதி தடை: காரணம் என்ன?

image

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு உம்ரா மற்றும் பிசினஸ் விசாக்கள் வழங்குவதை சவுதி தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த விசாவில் வருபவர்கள் அப்படியே சட்டவிரோதமாக தங்கிவிட்டு ஹஜ் யாத்திரையையும் முடித்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுவதாக சவுதி அரசு கருதுகிறது. இதை தவிர்க்கவே ஜூன் மாதம் வரை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

error: Content is protected !!