News March 31, 2025

பிளேடால் கழுத்தை அறுத்து மூதாட்டி தற்கொலை

image

மதுரை அண்ணாநகர் வீர வாஞ்சி தெரு அன்பு நகரைச் சேர்ந்த அழகு மனைவி மீனாம்பாள் (72). இவரது கணவர் அழகு இறந்து விட்ட நிலையில், உறவினரின் பராமரிப்பிலிருந்து வந்தார். இந்நிலையில், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனமுடைந்த மீனாம்பாள் வீட்டில் பிளேடு மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

Similar News

News April 9, 2025

மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ., கேமரா

image

மதுரை மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் அதிக குப்பை சேர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தீர்வு காண அதிக குப்பை சேரும் இடங்களில் AI தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தில் (டி.ஏ.என். ஐ.ஐ) அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து விரைவில் மாநகராட்சியில் 80 இடங்களில் ஏ.ஐ கேமரா பொறுத்தப்பட உள்ளது.

News April 9, 2025

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு

image

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL

News April 8, 2025

மதுரை : கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் 0452-2531110, மாவட்ட வருவாய் அலுவலர் 0452-2532106,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் 0452-2533272, மாவட்ட வழங்கல் அலுவலா் 0452-2546125,
பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் 0452-2529054,
ஆதி திராவிடா் (ம) பழங்குடியினா் நல அலுவலா் 0452-2536070,
உதவி இயக்குநா் (நில அளவை) 0452-2525099. மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும் .

error: Content is protected !!