News March 31, 2025
நடப்பு IPL தொடரில் முதல் பவுலர்..!

நடப்பு IPL தொடரின் முதல் மெய்டன் ஓவரை RR அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசியுள்ளார். CSK அணிக்கு எதிரான முதல் ஓவரிலேயே அவர், 1 விக்கெட் மெய்டன் ஓவரை வீசி அசத்தினார். தனது 2வது ஓவரிலும் அவர் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் 74 ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சரின் இந்த கம்பேக்கை பலரும் பாராட்டி வருகின்றனர். நேத்து யாரெல்லாம் மேட்ச் பாத்தீங்க?
Similar News
News January 19, 2026
35 வயதை நெருங்கிவிட்டீர்களா? அலர்ட்!

ஸ்வீடனின் Karolinska Institutet மேற்கொண்ட ஆய்வில் 35 வயதிலிருந்தே உடல் திறன், வலிமை குறைய தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயதில் உடற்பயிற்சி செய்திருந்தாலும், இந்த வீழ்ச்சி தொடங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், வயதான பிறகும், உடற்பயிற்சியை தொடங்கியவர்கள், 5-10% வரை உடல் திறனை மேம்படுத்த முடிந்தாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டவர்களை, பல ஆண்டுகள் கண்காணித்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
News January 19, 2026
மீண்டும் 3 நாள்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

பொங்கல் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டது. இனி எப்போது விடுமுறை வரும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ். ஆம்! ஜன.24, 25 (சனி, ஞாயிறு) மற்றும் ஜன.26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. எனவே, மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இப்போதே பயணத்தை திட்டமிடுங்கள்.
News January 19, 2026
பர்சனல் லோன் வேணுமா? முக்கிய அறிவிப்பு

‘உங்களுக்கு ₹10 லட்சம் Pre-approved Loan அப்ரூவ் ஆகியுள்ளது’ என்று உங்களில் பலருக்கும் போனில் மெசேஜ் வந்திருக்கலாம். அப்படி வந்தால், ஆஹா லோன் கிடைத்துவிட்டது என்று உடனே அப்ளை செய்துவிடாதீர்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவசரப்பட்டு எந்த ஒரு லோன் ஆஃபரையும் உடனே ஏற்க வேண்டாம். நிபந்தனைகளை முழுமையாகப் படித்து, வட்டி & EMI விவரங்களை உறுதி செய்தபின் ஏற்பதே பாதுகாப்பானதாம். SHARE IT!


