News March 31, 2025
கோவில்களில் நகைகள் திருடியவர் கைது

கயத்தாறு அருகே கோனார்கோட்டை அம்மன் கோவிலில் கடந்த மாதம் நள்ளிரவில் அம்மன் கழுத்தில் இருந்த 16 கிராம் பொட்டுத்தாலி திருடப்பட்டது. அடுத்த சில நாட்களில் திருமங்களக்குறிச்சி கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், துர்கை கோவில்களில் 1 பவுன் மதிப்புள்ள 8 பொட்டுதாலிகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நெல்லையை சேர்ந்த இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்து 21 கிராம் பொட்டுதாலிகளை மீட்டனர்.
Similar News
News February 6, 2026
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி நாள்

உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் உடன் ஆய்வு உதவியாளர் (Supreme Court Law Clerk 2026) பதவியில் 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் நிலையில் சட்டம் படித்தவர்கள் <
News February 6, 2026
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவர் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கழுகுமலையை சேர்ந்த ராஜேஷ்குமார் (25) மற்றும் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தம் (39) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரை செய்திருந்தார்.
News February 5, 2026
தூத்துக்குடி: இரவு நேர ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர அளவு போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் பொது மக்களை பாதுகாக்கவும் காவலர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்தது இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


