News March 31, 2025
கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுப்பதில் தமிழக அரசின் நிலை என்னவென்று? அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த மதன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், அவரது மனைவி வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டார். இது, கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த 10ஆவது தற்கொலை. அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்ககுமா? அல்லது தற்கொலைகள் தொடரட்டும் என வேடிக்கை பார்க்க போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருப்பத்தூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், காவலூர், அம்பலூர், வாணியம்பாடி, உமராபாத், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலையங்கள் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் 13 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News February 5, 2026
வாணியம்பாடி: அரசு மருத்துவர் தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக கடந்த பல மாதங்களாக பணியாற்றி வந்த, சிவசுப்பிரமணியம் என்பவர் நேற்று (04.02.2026) வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


