News March 31, 2025
வாழ்வை சிறப்பாகும் 20-20-20 Rule தெரியுமா?

காலை எழுந்ததும் முதல் 1 மணி 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையே மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 2வது 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்?
Similar News
News April 3, 2025
இன்றே கடைசி: CISFஇல் 1,161 காலியிடங்கள்

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) உள்ள 1,161 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். கான்ஸ்டபிள் நிலையிலான இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பாக 18-23 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. OBC, EWS பிரிவினர் விண்ணப்பக்கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும். பெண்கள், SC/ST பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. <
News April 3, 2025
அடுத்த படத்தை லாக் செய்த ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக ‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. வரும் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், தற்போது முதற்கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன. ஆதிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆதி தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கான இசைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
News April 3, 2025
ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்த Bhuvi

RCB பவுலர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல்லின் ஆல்டைம் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 183 விக்கெட்களை வீழ்த்தி, பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அதேபோல், பவர்பிளேயில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். பவர்பிளேயில் மட்டும் அவர் 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.