News March 31, 2025
விஷம் குடித்து தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News August 13, 2025
அதிர்ச்சி: தருமபுரி மாவட்டத்தில் 3,056 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார்3,056 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? மாவட்டத்தின் <
News August 13, 2025
தமிழக முதல்வா் தருமபுரி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 ஆகிய இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஆக. 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கவுள்ளாா். எனவே, பாதுகாப்பு கருதி அந்நாள்களில் தருமபுரி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக கூறினார்.
News August 13, 2025
தருமபுரி மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

நம்ம தருமபுரி மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா?
நகராட்சி- (2)
பேரூராட்சிகள்- (15)
வருவாய் கோட்டம்- (2)
தாலுகா- (7)
வருவாய் வட்டங்கள் – (7)
வருவாய் கிராமங்கள்- (470)
ஊராட்சி ஒன்றியம்- (10)
கிராம பஞ்சாயத்து- (254)
MP தொகுதி- (1)
MLA தொகுதி- (5)
மொத்த பரப்பளவு – 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை- 15,06,843
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!