News March 31, 2025

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: ஆளுநர்

image

கம்பர் வெறும் கவிஞர் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் உள்ளதாகவும், தமிழகத்தில் கம்பர் கொண்டாடப்படாதது வருத்தத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கலாச்சாரம் அரசியல் மயமாகியுள்ளதாகவும், அரசியல் காரணங்களால் கலாச்சாரம் மறக்கடிப்படுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 24, 2026

நாய்க்கடி.. அச்சத்தில் தற்கொலை

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி ஊழியர் ஒருவர் தெருநாய் கடித்ததால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். 30 வயதான இந்த நபரை சில நாட்களுக்கு முன் தெருநாய் கடித்துள்ளது. அவர், ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், அவரது நடத்தையில் அசாதாரண மாற்றங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும், தற்கொலை கடிதத்தில் ரேபிஸ் நோய் அச்சமே முடிவிற்கான காரணம் என எழுதியுள்ளார்.

News February 24, 2026

PRAHAAR.. பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை

image

‘PRAHAAR’ என்ற பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. எல்லை தாண்டிய ஜிஹாதி நெட்வொர்க்குகள், சைபர் தாக்குதல்கள், ட்ரோன் அடிப்படையிலான கடத்தல், கிரிப்டோகரன்சி, உயிரியல் மற்றும் அணுசக்தி பொருட்களின் தவறான பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள இந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதத்தை துளியும் சகித்துக்கொள்ள முடியாது என்ற அணுகுமுறையை இது உறுதிப்படுத்துகிறது.

News February 24, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஆள்வினையுடைமை ▶குறள் எண்: 619 ▶குறள்: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். ▶பொருள்: கடவுளே என்று அழைப்பதால் நடக்காத காரியம், ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற பலனைத் தரும்.

error: Content is protected !!