News March 31, 2025
CSK அணி போராடி தோல்வி

முதலில் பேட்டிங் செய்த RR அணியில், முன்னனி பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், நிதிஷ் ராணா 81 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 182 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய CSK, ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்ததால் நிதானமாக ஆடியது. ருதுராஜ் 63 ரன்களை விளாசினாலும், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. இதனால் 20 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Similar News
News January 14, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 14, 2026
டீச்சர்களின் போராட்டத்திற்கு இன்று தீர்வா?

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 19 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமாக <<18797386>>போராடி<<>> வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 14, 2026
BREAKING: பொங்கல் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி

TN மக்களுக்கு PM மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொருவரின் மெயிலுக்கும் அவரவர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியுள்ளார். மனிதனுக்கும், இயற்கைக்குமான நெருக்கத்தை காட்டும் பொங்கல், சர்வதேச விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி; உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் பெருமிதம் அடைவதாகவும் கூறியுள்ளார். PM வாழ்த்து உங்களுக்கு வந்ததா?


