News March 31, 2025

நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் ஷங்கர்

image

பல நாள்கள் இடைவெளிக்குப் பின் CSK அணிக்காக விளையாடியவர்கள் பட்டியலில் விஜய் ஷங்கர் (3,974 நாள்கள்) முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னதாக, அஸ்வின் 3,591 நாள்களுக்குப் பின் CSK அணிக்காக விளையாடி வருகிறார். மொத்த IPLஇலும் பல நாள்கள் கழித்து ஒரே அணிக்காக விளையாடுவோர் பட்டியலில் விஜய் ஷங்கர் 3ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 5,093 நாள்களுடன் கரன் ஷர்மா (RCB) உள்ளார்.

Similar News

News January 15, 2026

சர்ச்சையில் சிக்கிய அஜித்

image

நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித், ரிலையன்ஸின் CAMPA எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் SM-ல் தற்போது சர்ச்சையாகி உள்ளன. ரொனோல்டோ போன்ற உலக கால்பந்து ஜாம்பவானே இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்கும் நிலையில், அஜித் நடிப்பது ஏன் எனவும், தனது பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கூட வராத அஜித், இதற்கு மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

News January 15, 2026

டிரம்புக்கு ஈரான் நேரடியாக கொலை மிரட்டல்

image

ஈரானில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிகை எடுக்க நேரிடும் என எச்சரித்தார். இந்நிலையில், ஈரான் அரசு டிவி, 2024-ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் காயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது’ என நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

News January 15, 2026

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிவு தலைகீழாக மாறியது

image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளும், காளையர்களும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், காளையர் பாலமுருகன் ஒரே சுற்றில் (9-வது) 18 காளைகளை அடக்கி அரங்கையே அதிர வைத்துள்ளார். இதனால் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாற 16 காளைகளை அடக்கிய கார்த்தி 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சீறும் காளைகளும் திமிலில் திமிர் காட்ட, பாய்ந்து அடக்கிய வளையங்குளம் பாலமுருகனுக்கு வாழ்த்துகள் குவிகிறது.

error: Content is protected !!