News April 2, 2024
அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார். அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.
Similar News
News August 15, 2025
இளைஞர்கள் நீதி குடும்பத்தில் சமூகப் பணியாற்ற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று வெளியிட்டிருக்கும் செய்தியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதி குடும்பத்திற்கு சமூகப் பணி உறுப்பினர் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துக்கப்பட்டுள்ளது. 35 வயது கடந்தவராகவும் 65 வயதை கடக்காதவராகவும் இருக்க வேண்டும். உரிய கல்வித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News August 15, 2025
நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

2019ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 446 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 45 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்தம் 633 வழக்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இசக்கி பாண்டியன் என்பவருக்கு இன்று வழங்கியுள்ளனர்.
News August 15, 2025
நெல்லை: விபத்தில் ஒருவர் பலி; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.