News March 30, 2025
பறக்கும் செவ்வாய்: பண மழையில் 3 ராசிகள்!

துணிச்சல் குணத்தின் அதிபதியான செவ்வாய், வரும் 3ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்வதால் 3 ராசிகளுக்கு யோகம் அடிக்கிறது. 1) கடகம்: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்குபவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கும். 2) சிம்மம்: நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். 3) கன்னி: எதை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தேடி வரும்.
Similar News
News January 31, 2026
ஐடி சோதனையால் தொழிலதிபர் தற்கொலை!

ரியல் எஸ்டேட் நிறுவனமான Confident குழுமத்தின் நிறுவனர் சி.ஜே. ராய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சோதனைகள் குறித்த அச்சம் காரணமாக பெங்களூரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் தற்கொலை செய்ததாகவும், கேரளாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு இத்துயரம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 31, 2026
மாதத்திற்கு எவ்வளவு எண்ணெய் பயன்படுத்தலாம்?

சமையலில் உணவின் சுவைக்கும், நறுமணத்துக்கும், எண்ணெய் முக்கியமானது. ஆனால் அதனை அளவோடு பயன்படுத்துவதே நல்லது. டாக்டர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரே மாதத்திற்கு அரை லிட்டர் (500 மில்லி) எண்ணெய் பயன்படுத்த வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு சுமார் 2 – 3 ஸ்பூன் எண்ணெய் மட்டுமே செலவாகும். அதுவே 4 பேர் கொண்ட குடும்பம் என்றால் ஒரு மாதத்திற்கு சுமார் 2 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
News January 31, 2026
இந்திய அணிக்கு அஸ்வின் வேண்டுகோள்!

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 ஸ்பின்னர்களை களமிறக்க வேண்டாம் என Ex இந்திய வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணி ஒரு முக்கிய ஸ்பின்னர் & ஒரு ஸ்பின் வீசும் ஆல்-ரவுண்டருடன் விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மா பேட்டிங்குடன் தனது பந்துவீச்சிலும் கவனம் செலுத்தினால், அவர் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


