News March 30, 2025
திருவாரூர்: அரசு அதிகாரி மீது சி.பி.ஐ வழக்கு

காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே. ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவரது மனைவி விமலா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவுக்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News April 2, 2025
திருத்துறைப்பூண்டியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஏப்.5-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ”அடுத்த இலக்கு” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
News April 2, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
News April 2, 2025
திருவாரூர்: 10-ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் நடக்க இருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.