News March 30, 2025

பெண்ணை ஏமாற்றி உடலுறவு வைத்தால் என்ன தண்டனை?

image

வேலை, பதவி உயர்வு, திருமணம் என பொய் வாக்குறுதி அளித்து, பெண்ணிடம் ஒருவர் உடலுறவு வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து BNS சட்டத்தின் 69ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. சட்டப்படி இது குற்றம் என்றும், இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் எனவும், பிணையில் வெளிவர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

Similar News

News April 3, 2025

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் புது உச்சம்

image

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா புது உச்சம் படைத்துள்ளது. 2025ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது நட்பு நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பிரமோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரூ.23,622 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2024ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்த ரூ.21,803 கோடி பாதுகாப்பு தளவாடங்களுடன் ஒப்பிடுகையில் இது 12.04% அதிகமாகும். ரூ.23,622 கோடியில் தனியாரின் பங்களிப்பு ரூ.8,389 கோடியாகும்.

News April 3, 2025

விடிய விடிய மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 2, 2025

டிக் டாக் பெண் பிரபலத்தின் அந்தரங்க வீடியோ லீக்

image

அண்மையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த டிக் டாக் பெண் பிரபலமான மினஹில் மாலிக்கின் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆண் நண்பருடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளன. இது பழைய வீடியோ, AI வீடியோ என சிலர் பதிவிடும் நிலையில், விளம்பர உத்தி என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். எது உண்மையோ?

error: Content is protected !!