News March 30, 2025
தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

நாளை (மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல்2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்ரல்5 வரை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News April 2, 2025
தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும், அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News April 2, 2025
பால் உற்பத்தியை அதிகரிக்க தென்காசியில் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News April 2, 2025
தென்காசி:சுரண்டை நகராட்சி ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

சுரண்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.3 கோடியே20 லட்சம் ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பெற இங்கே <