News March 30, 2025
ITR-U தாக்கல்: நாளையே கடைசி

2022 முதல் 2025ம் நிதியாண்டு வரை திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (ITR-U )தாக்கல் செய்ய IT அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. நாளைக்குள் தாக்கல் செய்தால், 2022-23க்கு 50% கூடுதல் வரி மற்றும் வட்டி, 2023-24, 2024-25க்கு 25% கூடுதல் வரி மற்றும் வட்டி. அதன்பிறகு தாக்கல் செய்தால் 2024-25 தவிர்த்து அனைத்து கணக்குக்கும் கூடுதலாக 50% வரி மற்றும் வட்டி செலுத்த வேண்டும்.
Similar News
News January 20, 2026
காங்.-ல் ‘கோட்டா’ பாலிடிக்ஸ்: குமுறும் நிர்வாகிகள்

TN காங்.,-ன் <<18894402>>71 மாவட்ட தலைவர்கள்<<>> பட்டியல் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. ‘கோட்டா’ சிஸ்டத்தை ஒழிக்க நினைத்த ராகுல், ஒரு குழுவை அனுப்பி, நேர்காணல் நடத்தியுள்ளார். ஆனால், வெளியான பட்டியலை பார்த்து சில நிர்வாகிகள் அதிர்ந்துள்ளனராம். சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி என பல மாவட்டங்களில், முக்கிய தலைவர்களின் சிபாரிசு ‘கோட்டா’ சிஸ்டத்தில் தான் பதவி வழங்கியுள்ளனர் என அவர்கள் குமறுவதாக கூறப்படுகிறது.
News January 20, 2026
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News January 20, 2026
RCB அணியின் புதிய வரலாற்று சாதனை!

WPL தொடரில், தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற சாதனையை RCB அணி படைத்துள்ளது. 2025-ம் ஆண்டு சீசனில் தனது கடைசி போட்டியில் வென்றிருந்த RCB, 2026 சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்றுள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று Play-off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அந்த அணி, கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே 2024-ல் RCB சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


