News March 30, 2025
தேனியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை, தென்காசி, தேனி உட்பட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், ஏப்ரல் 3 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News February 3, 2026
தேனி: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

தேனி மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.
News February 3, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 3, 2026
தேனி: பெண்ணை விமர்சித்த அரசு வழக்கறிஞர்

கோம்பையை சேர்ந்த தர்மர் உத்தமபாளையம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள மலர்விழி என்பவரை விமர்சித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரில் தேனி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று தர்மரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, ஓடைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


