News March 30, 2025
விருதுநகர் கலெக்டர் பெயரில் போலி கணக்கு தொடக்கம்

விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பெயரில் முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், “இந்தப் போலி ஐடி அடிக்கடி வரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. நண்பர்களே, விழிப்புடன் இருங்கள். இதற்கு கடுமையான நடவடிக்கைகளைச் எடுக்குமாறு முகநூலை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதே போல் போலி கணக்கு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. *போலி கணக்கை பின் தொடர்பவர்களுக்கு பகிரவும்
Similar News
News April 2, 2025
வெம்பக்கோட்டை அகழாய்வில் அடுத்த அதிஷயம்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் “தங்கத்தால் செய்யப்பட்ட மணி” ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
விருதுநகரில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 2, 2025
விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் 100 காலிப்பணியிடங்கள்

விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு 100 பேர் நிரப்பப்பட உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <