News April 2, 2024
வேலூர்: அண்ணன் மகனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் துரை தயாநிதிக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News August 15, 2025
வேலூரில் வேகமாக பரவும் உயிர்கொல்லி நோய்: உஷார்

கியூலெக்ஸ் எனப்படும் கொசுவால் பரவும் மனித உயிரை கொல்லும் மோசமான நோய்களில் ஒன்றான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேலூரில் அதிகளவில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தடுக்க வேலூரைச் சேர்ந்த 5-15 வயது குழந்தைகளுக்கு செப்.12 வரை, அங்கன்வாடி குழந்தைகளுக்கு செப்.14-அக்.12 வரை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அக்.13-நவ.,12 வரை தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. *இந்நோய் குறித்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
News August 15, 2025
வேலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டம் முழுவதும் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை என அடுத்த 45 நாட்களில் வேலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடம், நேரம் குறித்த விவரங்களை <
News August 15, 2025
வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய கலெக்டர்!

இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி, இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.