News March 30, 2025
தேரோடும் வீதியில் அகிரப்பு அகற்ற நகராட்சி அறிவிப்பு

திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா வருகிற 7ஆம்தேதி நடைபெறுகிறது. அதன் காரணமாக தேர்வலம் வரக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் 2ஆம் தேதி நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினம் சம்பந்தபட்டவரிடம் வசூல் செய்யபடும் என அறிவித்திருந்தார். SHARE NOW!
Similar News
News July 6, 2025
திருவாரூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
திருவாரூர்: ரூ.85,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <
News July 6, 2025
கொரடாச்சேரி: டூவீலரில் இருந்து மயங்கி விழுந்தவர் பலி

கொரடாச்சேரி அருகே கீரந்தங்குடியைச் சேர்ந்தவர் காத்தையன் (61). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திருவரங்கநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் காத்தையனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு டூவீலரில் இருந்து மயங்கி கீழே விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.