News March 30, 2025
பள்ளி விடுமுறையில் மாற்றம்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதியுடன் 10ஆம் வகுப்பு தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பினருக்கான தேர்வுகளையும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் உண்டு. வெயிலின் தாக்கத்தினால் இதிலும் மாற்றம் வருமா?
Similar News
News April 3, 2025
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் புது உச்சம்

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா புது உச்சம் படைத்துள்ளது. 2025ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது நட்பு நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பிரமோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரூ.23,622 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2024ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்த ரூ.21,803 கோடி பாதுகாப்பு தளவாடங்களுடன் ஒப்பிடுகையில் இது 12.04% அதிகமாகும். ரூ.23,622 கோடியில் தனியாரின் பங்களிப்பு ரூ.8,389 கோடியாகும்.
News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
News April 2, 2025
டிக் டாக் பெண் பிரபலத்தின் அந்தரங்க வீடியோ லீக்

அண்மையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த டிக் டாக் பெண் பிரபலமான மினஹில் மாலிக்கின் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆண் நண்பருடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளன. இது பழைய வீடியோ, AI வீடியோ என சிலர் பதிவிடும் நிலையில், விளம்பர உத்தி என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். எது உண்மையோ?