News March 30, 2025

அனைத்து மான்களையும் பிடிக்க முடிவு

image

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரி சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறுகையில், ”அல்லாபாத் ஏரிக்குள் இருக்கும் அனைத்து மான்களையும் நாங்கள் பிடிக்க உள்ளோம். அவற்றை பாதுகாப்பாக பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள காப்பு காடுகளில் விடுவோம்” எனத் தெரிவித்தார்.

Similar News

News February 18, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News February 18, 2026

காஞ்சி: 2 வயது குழந்தை பரிதாப பலி!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர், தனது 21/2 வயது ஆண் குழந்தை நெர்வின் மற்றும் உறவினர் கன்னியப்பன்(57) ஆகியோருடன் நேற்று(பிப்.17) இரவு மணிமங்கலம் பகுதியில் இருந்து ஆட்டோவில் முடிச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில், கன்னியப்பன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

News February 18, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!