News March 30, 2025
விஜய்யின் DMK எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு ஆதரவு:சீமான்

திமுகவுக்கு எதிரான விஜய்யின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக சீமான் கூறியுள்ளார். வரும் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டு திமுகவை வீழ்த்தும் என விஜய் பேசியது வரவேற்கத்தக்கது என்ற அவர், தான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன் என்றார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்(நாதக) வாங்கப்போவது திமுக, அதிமுக வாக்குகள் அல்ல, மக்களின் வாக்குகள் எனத் தெரிவித்தார்.
Similar News
News January 19, 2026
ரன் மெஷின் கோலியின் உலக சாதனை!

களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதாவது ஒரு சாதனை படைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் விராட் கோலி. அது நேற்றைய போட்டியிலும் தொடர்ந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் 3-வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை 244 இன்னிங்ஸில் 12,676 ரன்களை கோலி அடித்துள்ளார். இந்த பட்டியலில் 12,662 ரன்களுடன் ஆஸி., ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்தில் உள்ளார்.
News January 19, 2026
திமுகவை சீண்டிய காங்கிரஸ் MLA

2021-ல் எதிர்க்கட்சி(அதிமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதற்காகவே திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கியபோதும் கூட ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் MLA ராஜேஷ்குமார் கூறியுள்ளார். ஆனால், இன்று காங்கிரஸ் வாக்குச்சாவடி அளவிலும், கிராம அளவிலும் பலமடைந்திருப்பதாக கூறிய அவர், அந்த அடிப்படையில்தான் அதிகமான சீட்டுகள் கேட்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதில் எந்தத் தவறும் இல்லையே எனவும் அவர் பேசியுள்ளார்.
News January 19, 2026
விஜய் பட நடிகையிடம் அத்துமீறிய நடிகர்.. பளார்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி கேரவனில் நுழைந்ததாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணலில் இதுபற்றி பேசிய அவர், கேரவனில் நுழைந்த நடிகர் எல்லை மீறி தன்னை தொட முயன்றபோது அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


