News March 30, 2025
விருதுநகர் காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகள் மீட்பு

விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் அரசு உதவி பெறும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக மீட்கப்பட்ட ஏழு சிறுமிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த 14 வயது சிறுமியும், 15 வயது சிறுமியும் திடீரென மாயமாயினர். இது குறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீட்டனர்.
Similar News
News November 1, 2025
விருதுநகரில் பெண் தொழில் முனைவோர் தேர்வு முகாம்

மகளிர் சுய உதவிக் குழுவில் 2 வருடங்கள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18- 55 வயதுடைய அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலம் 2% வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ.4 முதல் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
விருதுநகர்: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 1, 2025
விருதுநகர்: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்து ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


