News March 30, 2025

நடிகரும், ராணுவ வீரருமான டெனிஸ் ஆர்ன்ட் காலமானார்

image

ஹாலிவுட் நடிகரும், Ex விமானப்படை வீரருமான டெனிஸ் ஆர்ன்ட்(82) உடல்நலக்குறைவால் வாஷிங்டனில் காலமானார். மேடை நாடகம், ராணுவம், சினிமா என பல்துறை வித்தகராக வலம் வந்த இவர், வியட்நாம் போரில் விமானியாக பணியாற்றியதற்காக 2 ‘Purple Hearts’ மெடல்களை பெற்றவர். இவர் நடித்த Murder, Basic Instinct, Undisputed உள்ளிட்ட படங்கள் உலக அளவில் பிரபலமானவை. டெனிஸ் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News April 2, 2025

ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

image

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

News April 2, 2025

கச்சத்தீவு விவகாரம்: ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

image

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது யார் என நாட்டு மக்களிடம் ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டபோது மத்தியிலும், தமிழகத்திலும் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது என ஸ்டாலின் எடுத்துரைக்க வேண்டும் என்றார். கச்சத்தீவை ஒப்படைத்த காங்கிரஸூடன் திமுக ஏன் கூட்டணியில் உள்ளது எனவும் வினவினார்.

News April 2, 2025

என்னடா நடக்குது இங்க!

image

நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.

error: Content is protected !!