News March 30, 2025
சிவகங்கையில் சிறு நீரக பாதிப்பு அதிகரிப்பு; ப.சிதம்பரம் கவலை

சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எதனால் வருகிறது என தெரியவில்லை.குடிநீர் காரணமா அல்லது தட்பவெப்ப நிலை காரணமா என தெரியவில்லை. சிவகங்கையில், டயாலிசிஸ் இயந்திரம் தொடர்ந்து கொடுத்தாலும், டயாலிசிஸ் மிஷின்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (09.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
சிவகங்கை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை செவ்வாய்கிழமை (10.2.2026) மற்றும் புதன்கிழமை (11.2.2026) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News February 9, 2026
சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


