News March 30, 2025
ஒரே மாதத்தில் ₹3,360 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,360 உயர்ந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் ₹7,940க்கும், சவரன் ₹63,520க்கும் விற்பனையானது. பின்னர், கிடுகிடுவென அதிகரித்து 30 நாள்களில் ஒரு கிராமுக்கு ₹420 உயர்ந்துள்ளது. இதனால், 8 கிராம் அடங்கிய ஒரு சவரன் இன்று ₹66,880க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஒரு சவரன் ₹50,200க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2026
ஈரோடு: 10th போதும்., ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

ஈரோடு மக்களே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனமான NCL-ல் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 577 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 18 – 30 வயதுகுட்பட்ட 10th, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் மே 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.43,775 – ரூ.47,330 வரை வழங்கப்படும். மேலும் பணி விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News April 10, 2026
10th போதும், ₹21,000 சம்பளம்.. APPLY NOW

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.20-க்குள் இந்த <
News April 10, 2026
ஸ்டாலின் அளவுக்கு EPS-க்கு தைரியம் இல்லை: OPS

கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மக்களை நேரில் சந்தித்த ஒரே CM ஸ்டாலின் தான் என OPS கூறியுள்ளார். EPS-க்கு அந்த அளவு தைரியம் இல்லை என்ற அவர், ஆனாலும் நிலைமையை திறமையாக கையாண்டது போல EPS தற்பெருமை பேசுகிறார் என்றார். இவ்வுலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்களானால், அது EPS தான் எனவும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அவர் தோல்வியையே சந்திப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.


