News March 30, 2025
திருச்சியில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த 27ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News April 2, 2025
பல் சிகிச்சையால் தலைவலி: குடும்பத்தோடு சாலை மறியல்

காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 2, 2025
திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 4,5 ஆகிய தேதிகளில் திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து, மழைக்கான முன்னேச்சரிக்கையோடு இருங்கள்.
News April 2, 2025
திருச்சியில் 106 குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செல்வநாகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுமட்டும் அல்லாது, திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.