News April 2, 2024

சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

image

சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், துப்பாக்கியால் சுடவே பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நடந்த சண்டையில் 8 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

Similar News

News January 30, 2026

BREAKING: கூட்டணியை இறுதி செய்தார் பிரேமலதா

image

திமுகவுடன் தேமுதிக கூட்டணியை இறுதி செய்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா முதலில் 20+1 தொகுதிகள் கேட்ட நிலையில், தற்போது 8+1 வழங்க திமுக தலைமை இசைவு தெரிவித்துள்ளதாம். கூட்டணி தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கையோடு, கனிமொழி, பிரேமலதாவுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 3-ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பேன் என <<18991063>>பிரேமலதா நேற்று<<>> கூறியிருந்தார்.

News January 30, 2026

தகுதியான படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?

image

தமிழ்நாடு அரசு <<18995961>>அறிவித்துள்ள <<>>திரைப்பட விருதுகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தை விட திரையில் வெற்றி பெற்ற படங்களுக்கே விருதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக SM-ல் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. அதேபோல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்காமல், வெற்றி பெற்ற படங்களில் நடித்த நடிகர், நடிகைகளே விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News January 30, 2026

தமிழக தேர்தல்.. விரைவில் முக்கிய அறிவிப்புகள்

image

தமிழக தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிப்.13 (அ) 16-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிடுகிறதாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்ற இனிப்பான செய்தியும் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!