News March 30, 2025

காஞ்சிபுரத்தில் ரூ.672 கோடிக்கு பட்ஜெட்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.15 கோடியில் பாதாள சாக்கடை வழித்தடம். ஓ.பி.குளம், வெள்ளை குளத்தை சீரமைத்து ரூ.3 கோடியில் நடைபயிற்சி. ஓரிக்கை, செவிலிமேடு பகுதிகளில் ரூ.400 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டம். தூய்மை பணியாளர்களுக்கு காலை டிபன் மற்றும் இரவில் பணியாற்றுபவர்களுக்கு டீ. ரூ.75 லட்சத்தில் புதிதாக நாய் கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

Similar News

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 107 அங்கன்வாடி பணியாளர், 11 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 79 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

காஞ்சிபுரம், தயாா்குளம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (ஏப்ரல் 6) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 7, 2025

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் ஆரநேரி அரசு பள்ளி அருகே நேற்று (ஏப்ரல் 6) கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்ததில், உ.பி.,யைச் சேர்ந்த சின்டூ (27) என்பவர், கேரளாவைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, அபுஷாகீர் (37), மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜீத் (30), ஷிபு (24), சின்டூ (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!